கொரோனா நோய்தொற்று ஆந்திரா, கர்நாடகாவில் அதிகரிப்பு; தமிழக மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – சுகாதாரத் துறைச் செயலாளர் அறிவுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்று ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று (28-08-2020) நடைபெற்றது அதில் பங்கேற்ற சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் 14 ஆயிரம், ஆந்திராவில் 10 ஆயிரம் கர்நாடகாவில் 9 ஆயிரம் என தினமும் தோற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் இதை ஒரு எச்சரிக்கையான காலமாக கருதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தினமும் 75 ஆயிரம் பரிசோதனைகள் என இதுவரை 45 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை மாதத்திலிருந்து தினமும் 6 ஆயிரத்திற்கும் குறைவான புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 1,300 க்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

எப்போதும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மூச்சுத்திணறல் வந்த பிறகு அவர்களை காப்பாற்றுவது கடினம். எனவே, கொரோனா அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களிலும் சென்னையில் அடையாறு, கோடம்பாக்கம், திருவிக நகர் பகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. விதிகளை மீறும் பொதுமக்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிப்பது மாநகராட்சி மட்டுமல்லாது, காவல்துறையினரும் அபராதம் விதிப்பது தொடர்பான அவசர சட்டம் தயாராகி வருகிறது.”

இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது, “கொரோனா 100 விழுக்காடு கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. இறப்பை குறைப்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. அதனால் சுயகட்டுப்பாட்டுடன் மக்கள் இருக்க வேண்டும். கொரோனா தொற்றுடன், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைஹயும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *