தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – தமிழக அரசு அதிரடி

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் வகையிலான சட்ட மசோதாவை நேற்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

தமிழக அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 – ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது பட்டபடிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும். பட்டமேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தமிழ் வழிக் கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும்.

அதே போன்று பத்தாம் வகுப்பு தகுதியுள்ள அரசு பணிக்கும் 6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்று இருக்க வேண்டுமென்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு இதுவரை 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இருந்த சட்டத்தில், இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படித்த அவசியம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இனி தமிழ் வழியில் கல்வி பயின்றால் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசுப் பணியில் முன்னுரிமை கிடைக்கும்.

2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின்படி, தேர்ச்சிக்கான மதிப்பெண் 35-லிருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *