திமுகவின் கிராம சபை கூட்டத்துக்க தடை; எடப்பாடியின் தோல்வி பயமே காரணம் – வேல்முருகன் சாடல்

திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு அதிமுக தடை விதிப்பதற்கு தோல்வி பயம் தான் காரணம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளான வேளாண் சட்டம் மற்றும் பெட்ரோல், எரிவளி உருளை விலையேற்றம் ஆகியற்றை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளை பட்டினிக்கு கொண்டு செல்லக்கூடிய சட்டம். பெட்ரோல், எரிவளி உருளை விலை உயர்வு அதிகரித்துள்ளது இது குறித்து மத்திய அரசு பேசுவதில்லை.

அதேபோல், வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அம்பானி, அதானி ஆகியோருக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது.

மீண்டும் எடப்பாடி ஆட்சி வராது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். அதேபோல், அதிமுகவின் ஆட்சி கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்கின்ற தோல்வி பயம் காரணமாகத்தான் திமுக சார்வில் நடத்தப்பட்டு வந்த கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் தடை விதித்துள்ளது.

பாஜகவை சேர்ந்தவர்கள் எடப்பாடி ஆட்சியை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். ஆனால், அதிமுகவினர் அவர்களுடன் இணைந்து சுயமரியாதை விட்டு ஆட்சி நடத்துகிறது”.

இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *