பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிர் அணி தலைவர் பாலியல் மற்றும் மோசடி புகார்

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி ஏ டி கலிவரதன் மீது பாஜகவின் மகளிரணி தலைவர் பாலியல் மற்றும் பண மோசடி குறித்து புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாஜகவின் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணியின் பொதுச் செயலாளராக இருப்பவர் காயத்ரி. இவர் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் விஏடி கலிவரதன் மீது  பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தன்னை பாஜகவில் பெரிய ஆளாக்கி விடுவதாகவும், மாவட்ட மகளிரணித் தலைவியாக்கி விடுவதாகவும் கூறி விஏடி கலிவரதன் பலமுறை பாலியல் ரீதியாக வன்முறை செய்துள்ளதாகவும் மேலும் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதைப்பற்றி வெளியே கூறினால் தன்னை தீர்த்துக் கட்டிவிடுவதாக விஏடி கலிவரதன் மிரட்டுவதாகவும் தனது லெட்டர் பேடில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *